Breaking News


Warning: sprintf(): Too few arguments in /var/www/cineglit.in/data/www/cineglit.in/wp-content/themes/newsreaders/assets/lib/breadcrumbs/breadcrumbs.php on line 252

Vikram: முதல் பாதில ஆண்டவருக்கு கம்மியான சீன் ஏன்.?: லோகேஷ் சொன்ன சீக்ரெட் தகவல்.!

கமல் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விக்ரம்’ படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்திற்காகவெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்தப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்யும் இணையத்தை தெறிக்கவிட்டது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது ‘விக்ரம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் தீவிர ரசிகரான இவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பிருந்தது. மேலும் கடைசி நேர ட்விஸ்ட்டாக இந்தப்படத்தில் சூர்யா கெஸ்ட் நடித்தார்

மேலும் நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்தப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘விக்ரம்’ படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் பாசிட்டிவ்வான விமர்சனங்களையே குவித்து வருகிறது.