Viduthalai: விடுதலையில் ‘ஃபென்டாஸ்டிக் பர்ஃபாமன்ஸ்’ ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீயை கொண்டாடும் ரசிகர்கள்!

Viduthalai: விடுதலை படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீயின் பர்ஃபாமன்ஸை பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் தங்கை மகள் பவானிஸ்ரீ. இவர் பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷின் தங்கை ஆவார். இசை குடும்பத்தில் பிறந்த பவானிஸ்ரீக்கு இசையை விட சினிமா மீதுதான் தீராக் காதல். சிறு வயதிலேயே இசைத்துறையில் அவரை சேர்த்து விட்ட போதும், நடிப்பிலேயே ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

இதையடுத்து மாடலிங் நடிப்பு என கவனம் செலுத்தி வந்த பவானிஸ்ரீ தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தில் நடித்துள்ளார். விடுதலை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. நகைச்சுவை நடிகரான சூரி இந்த படத்தின் மூலம் ஹீரோவாக தடம் பதித்துள்ளார்.

இந்த படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து விடுதலை படம் உருவாக்கப்பட்டுள்ளது. விடுதலை படத்தில் விஜய் சேதுபதியும் பவானிஸ்ரீயும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பவானி ஸ்ரீயின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பிரபல விமர்சகரான பிரசாந்த ரங்கசாமி பவானிஸ்ரீயின் நடிப்பை ஃபென்டாஸ்டிக் பர்ஃபாமன்ஸ் என பாராட்டியுள்ளார். மேலும் தனது கேரக்டருக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். பிரசாந்த் ரங்கசாமியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்களும் பவானிஸ்ரீக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தனது நடிப்பை பாராட்டிய பிரசாந்த் ரங்கசாமிக்கு நன்றி கூறியுள்ளார் பவானிஸ்ரீ. பவானிஸ்ரீ விடுதலை படத்தில் மலை வாழ் கிராம பெண்ணாக அவர்களுக்கே உரிய உடல் மொழியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே விடுதலை படம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ள பவானிஸ்ரீ, அந்த நாள் வந்துவிட்டது! இந்த அற்புதமான பாத்திரத்தை எனக்கு அளித்து விடுதலை உலகிற்கு அழைத்துச் சென்ற வெற்றிமாறன் சாருக்கு வெறும் நன்றி மட்டும் போதாது.
மற்றும் முழுக் குழுவின் கடின உழைப்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி! #Viduthalaipart1 இன்றிலிருந்து உங்களுடையது! என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

கௌதம் மேனன் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொள்ளாத விஜய்..இதுதான் காரணமா ?

வாரிசு படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விக்ரமின் வெற்றி அவரை இந்தியளவில் பிரபலமான நடிகராக மாற்றியது. இதைத்தொடர்ந்து அவர் விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது.

பொதுவாக இருக்கும் விஜய் படங்களை காட்டிலும் லியோ படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதற்கு மிக முக்கிய காரணம் லோகேஷ் தான். மேலும் மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் அம்சங்களை இணைத்த லோகேஷ் இம்முறை லியோ படத்தை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் உருவாக்கி வருகின்றார்.

இந்நிலையில் இப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு காரணமாக இப்படத்தின் பூஜை துவங்கும் முன்பே பல கோடிக்கு வியாபாரமாகியுள்ளது. மேலும் இந்த எதிர்பார்ப்பையும் மீறி லோகேஷ் தரமான படத்தை விஜய்க்கு கொடுப்பார் என ரசிகர்களால் நம்பப்பட்டு வருகின்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோ கடந்த மாதம் வெளியான நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், கௌதம் மேனன், மிஸ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தில் மிஸ்கின் தன் பகுதி படப்பிடிப்பை முடிந்துவிட்டதாக அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நினையில் சமீபத்தில் லியோ படப்பிடிப்பு தளத்தில் கௌதம் மேனனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் லோகேஷ் கனகராஜ் உட்பட படத்தில் பணியாற்றிவரும் பல கலைஞர்கள் இருந்தனர்.

ஆனால் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் இப்புகைப்படத்தில் இல்லை. மேலும் அவர்கள் கௌதம் மேனனின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை என்ற தகவலும் பரவி வந்தது. இந்நிலையயில் லியோ படப்பிடிப்பில் இருந்து விஜய்யும் த்ரிஷாவும் ஓய்வில் இருப்பதால் அவர்கள் சென்னை வந்தடைந்தனர். அதன் காரணமாகவே தான் அவர்களால் கௌதம் மேனன் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.