‘ஸ்ரீ 2’ உலகளாவிய வசூல்: ஸ்ரத்தா-ராஜ்குமாரின் திரைப்படம் 8 நாட்களில் ரூ. 428 கோடியை எட்டியது, அடுத்து ரூ. 500 கோடியை எட்டுமா?

ஸ்ரத்தா கபூர் மற்றும் ராஜ்குமார ராவ் நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ 2’ ஹாரர் காமெடி திரைப்படம் திரையரங்குகளில் சுவாரஸ்யமான வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படம் வெளியான 8 நாட்களில் உலகளாவிய வசூலில் ரூ. 428 கோடியை எட்டியுள்ளது.

இந்தியாவின் மொத்த வசூலில் ரூ. 363 கோடியும், வெளிநாடுகளில் மொத்த வசூலில் ரூ. 64.5 கோடியும் சேர்த்து, மொத்தம் ரூ. 428 கோடி வசூலித்துள்ளது. மேடாக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தகவலின்படி, இத்திரைப்படம் விரைவில் ரூ. 500 கோடி மைல்கல்லை எட்டவுள்ளது.

இந்தத் திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிசிலும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இரண்டாவது வியாழன் நாளில் சற்றே குறைந்துள்ளதாக இருந்தாலும், இந்தியாவில் இத்திரைப்படம் ரூ. 300 கோடியை கடந்துள்ளது.

படத்தின் முன்னோட்ட காட்சிகளிலேயே ரூ. 9.40 கோடியும், வெளியான முதல் நாளில் ரூ. 55.40 கோடியும், இரண்டாம் நாளில் ரூ. 35.30 கோடியும், மூன்றாம் நாளில் ரூ. 45.70 கோடியும், நான்காம் நாளில் ரூ. 58.20 கோடியும், ஐந்தாம் நாளில் ரூ. 38.40 கோடியும், ஆறாம் நாளில் ரூ. 26.80 கோடியும், ஏழாம் நாளில் ரூ. 26.80 கோடியும், எட்டாம் நாளில் சுமார் ரூ. 18.20 கோடியும் வசூலித்துள்ளது.

இதனால், ‘ஸ்ரீ 2’யின் இந்தியா மொத்த நிகர்வை ரூ. 307.80 கோடியாக உயர்த்தியுள்ளது என்று திரைப்பட விமர்சகர் மற்றும் வர்த்தக நிபுணர் தரன் ஆதர்ஷ் தெரிவித்தார்.

திரைப்படத்தின் சாதனைகள் குறித்து கருத்து தெரிவித்த வர்த்தக நிபுணர் சுமித் காதல், இதன் வெற்றி இயக்குனர் அமர் கவுசிக், ‘ஸ்ரீ 2’ எழுத்தாளர் நிரேன் பாட்டும், ‘ஸ்ரீ’ படத்தின் எழுத்தாளர்கள் ராஜ் மற்றும் டி.கே.வினும் சொந்தமானது என்றார்.

“இந்தத் தொடர் திரைப்படத்தின் உண்மையான சூப்பர்ஸ்டார்கள் இதன் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் இவற்றின் பின்னணியில் இருக்கும் சுயபுத்திகள்,” என்று காதல் X (முன்பு ட்விட்டர்) மாடலில் எழுதியுள்ளார்.

மேடாக் ஃபிலிம்ஸ் தயாரித்த ‘ஸ்ரீ 2’, 2018ல் வெளியான ‘ஸ்ரீ’ படத்தின் நிகழ்வுகளை தொடர்கிறது. இத்திரைப்படம் சண்டேரி நகரத்தை சர்கடா எனும் தீய சக்தியிலிருந்து காப்பாற்றும் விக்கி மற்றும் அவரது நண்பர்களின் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ராஜ்குமார ராவ், ஸ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பனர்ஜீ மற்றும் சுனில் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அக்ஷய் குமார், வருண் தவான் மற்றும் தமன்னா பதியா கெஸ்ட் வேடங்களில் தோன்றியுள்ளனர்.

டொமினிக் மோலின் “தி நைட் ஆஃப் தி 12” திரைப்படம் துப்பறியும் படங்களுக்கான ஜாக் டெரே விருதைப் பெற்றது

ஜனவரி 12, வியாழன் அன்று டொமினிக் மோலின் க்ரைம் த்ரில்லர் “லா நியூட் டு 12″க்கு ஜாக் டெரே பரிசு வழங்கப்பட்டது. இப்படம் பார்வையாளரை நீதித்துறை காவல்துறையின் குழுவில் மூழ்கடிக்கிறது.

த்ரில்ஸை விரும்புவோருக்கு இது ஒரு பரிசு. துப்பறியும் படங்களுக்கான Jacques Deray பரிசு இந்த ஆண்டு ஒரு பெண்ணின் கொலை மற்றும் பெண் கொலைகள் தொடர்பான விசாரணைகள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை தூண்டும் ஒரு த்ரில்லர், டொமினிக் மோல் எழுதிய The Night of the 12th, Lumiere Institute வியாழக்கிழமை அறிவித்தது.

“டொமினிக் மோல், வெர்சாய்ஸ் போலீஸ் படையின் (“18.3, போலீஸ் படையில் ஒரு வருடம்”) தனது விசாரணையில் பாலின் குனா சொன்ன செய்தியால் ஈர்க்கப்பட்டவர், பார்வையாளரை ஒரு போலீஸ் படையில் மூழ்கடித்து, பெண் கொலை பற்றிய அரசியல் படைப்பை வழங்குகிறார். “பரிசை வழங்கும் லியோனின் லூமியர் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் “கேன்ஸ் பிரீமியர்” பிரிவில் வழங்கப்பட்டது, PJ இன் புலனாய்வாளர்களின் ஜோடியாக Bastien Bouillon மற்றும் Bouli Lanners நடித்த இந்த திரைப்படம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. போலீஸ் படையிலும் மேகிஸ்மோவைச் சமாளிக்கும் இந்தத் திரைப்படம், ஜூலை மாதம் வெளியிடப்பட்டது மற்றும் அந்த ஆண்டின் பிரெஞ்சு வெற்றிகளில் ஒன்றாக இருந்தது, மொத்தம் 490,000 பார்வையாளர்கள். 60 வயதான டொமினிக் மோல், ஹாரியின் ஆசிரியரும் ஆவார், அவர் உங்களுக்கு நல்லது செய்ய விரும்பும் நண்பர் அல்லது மிருகங்களுக்கு மட்டும்.

Dhanush: ஒரே நேரத்தில் ரஜினி, தனுஷுடன் இணையும் பிரபலம்: வெறித்தனமான அப்டேட்.!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களும் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகின. இந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். அண்மையில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரசிகர்களின் அந்த குறையை போக்கியது.

தனுஷ், நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து ‘நானே வருவேன்’ படத்தில் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைந்துள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். 1930-40 களில் நடந்த சம்பவங்களாக பீரியட் புலிமான இந்தப்படம் உருவாகவுள்ளது.

இதன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் சம்பந்தமான படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிவராஜ்குமார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விற்பனை ஆகி விட்டதாக கூறப்படுகிறது. கெளபாய் பாணியில் ‘கேப்டன் மில்லர்’ படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sardar: கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள சர்தார் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார் சீமான்.

Sardar: கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள சர்தார் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார் சீமான். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சர்தார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது சர்தார் திரைப்படம். இந்நிலையில் சர்தார் படத்தை இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் புகழ்ந்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சர்தார் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இதை படம் என்று சொல்ல முடியாது படிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த கருத்தை வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன். தண்ணீர் மிகப்பெரிய வியாபாரா பொருளா மாற்றப்பட்டு வருகிறது.

இது எவ்வளவு பெரிய பேராபத்து என்பது புரியவரும். இந்த படம் அதை அழமாக கூறியிருக்கிறது. இப்படி ஒரு படத்தை தயாரித்தது பெரிய விஷயம். இயக்குநர் பிஎஸ் மித்ரனுக்கு சமூக பொறுப்பு இருக்கு. படத்தில் அனைத்தும் நேர்த்தியாக உள்ளது. கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கும் இது நல்ல படம் என தெரிவித்துள்ளார் சீமான்.

Zee tamil: கடைசி நிமிடத்தில் புஷ்பாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.பஞ்சாயத்தில் ஹெல்மெட் நபர் ஹெல்மெட்டை கழட்ட அது சங்கிலி என தெரியவர அனைவரும் ஷாக்காகின்றனர். இரங்கநாயகி சங்கிலியை மிரட்டி உண்மையை கேட்க அவன் பத்து லட்சம் பணத்தை திருடியது நான்தான் என்று ஒத்துக்கொள்கிறான்.
அப்போது வெற்றி கெத்தாக வந்து நின்று பார்க்க இரங்கநாயகி புஷ்பாவிடம் இனிமேல் வீட்டையும் மெஸ்ஸையும் கேட்டு மீனாட்சியை தொந்தரவு பண்ண கூடாது, அதோட இப்படி ஒரு தப்பு நடக்க காரணமான புஷ்பா மீனாட்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும் என்று தீர்ப்பு சொல்கிறாள்.
தீர்ப்பை புஷ்பா மறுக்க ஊரே புஷ்பாவை எதிர்க்க வேறுவழியில்லாமல் புஷ்பா மீனாட்சி காலில் விழுந்துவிட்டு ஓடுகிறாள். பஞ்சாயத்து கூட்டம் கலைய அங்கு சக்தி வந்து அம்மா மீது கோவபட்டு செல்ல மீனாட்சி வருத்தப்பட்டு நிற்கிறாள்.
இரங்கநாயகி வீட்டில் சரண்யா காத்திருக்க வெற்றி நண்பர்களுடன் வந்து பஞ்சாயத்தில் நடந்த விசயங்களை சொல்ல அவள் எப்படி உண்மையை ஒத்துகிட்டா என கேட்க வெற்றி ஃப்ளாஷ் பேக்கில் நடந்த விஷயங்களை சொல்கிறான்.

இந்த பக்கம் புஷ்பா தன் வீட்டில் மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்ற அனைவரும் தடுக்க என் மானம் போச்சே என சங்கிலியை அடித்து அழுகிறாள். பஞ்சாயத்தில் அசிங்கப்பட்ட புஷ்பா மீனாட்சியை பழிவாங்க அடுத்து என்ன செய்யப் போகிறாள்? மீனாட்சி சக்தியை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை அறிய தவறாமல் மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாருங்கள்.

PS 1: இரண்டு கதாபாத்திரங்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பிய சூர்யா, ஜோ: யார் யாருக்குன்னு தெரியுமா.?

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த ஜெயம் ரவி, த்ரிஷா கதாபாத்திரங்களுக்கு பூங்கொத்தை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ள‘பொன்னியின் செல்வன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் 300 கோடி ரூபாய் வசூலை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்து வருகிறது.

இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையிலும் நடந்து வருகிறது ‘பொன்னியின் செல்வன்’ படம். ரஜினி, ஷங்கர், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் கார்த்தி, ஜெயம் ரவியுடன் சேர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை பார்த்த கமல் படக்குழுவினரை பாராட்டி தள்ளியுள்ளார்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும், படத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்த குந்தவை மற்றும் அருண்மொழி வர்மன் கேரக்டரில் நடித்த திரிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்து அழகிய மலர் கொத்தை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர். இதனை த்ரிஷாவும், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். அவர்களின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vikram: முதல் பாதில ஆண்டவருக்கு கம்மியான சீன் ஏன்.?: லோகேஷ் சொன்ன சீக்ரெட் தகவல்.!

கமல் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விக்ரம்’ படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. Continue reading “Vikram: முதல் பாதில ஆண்டவருக்கு கம்மியான சீன் ஏன்.?: லோகேஷ் சொன்ன சீக்ரெட் தகவல்.!”

‘விக்ரம்’ முழுக்க முழுக்க என்னோட தரமான சம்பவம்: லோகேஷ் சொன்ன மாஸ் தகவல்..!

கமலின் ‘விக்ரம்’ படம் முழுக்க முழுக்க என்னோட பாணியில் இருக்கும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். Continue reading “‘விக்ரம்’ முழுக்க முழுக்க என்னோட தரமான சம்பவம்: லோகேஷ் சொன்ன மாஸ் தகவல்..!”

சீனாவில் ரிலீஸ் ஆகும் கனா திரைப்படம்… சைனீஸில் வாழ்த்திய நடிகர் சத்யராஜ்!

சீனாவில் ரிலீஸ் ஆகும் கனா திரைப்படத்திற்கு சீன மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ். Continue reading “சீனாவில் ரிலீஸ் ஆகும் கனா திரைப்படம்… சைனீஸில் வாழ்த்திய நடிகர் சத்யராஜ்!”

அஜித்தின் ‘வலிமை’ – சினிமா விமர்சனம்

நடிகர்கள்: அஜீத், ஹிமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா, சுந்தர்; இசை: யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான்; ஒளிப்பதிவு: நீரவ் ஷா; இயக்கம்: எச். வினோத். Continue reading “அஜித்தின் ‘வலிமை’ – சினிமா விமர்சனம்”