கமலின் ‘விக்ரம்’ படம் முழுக்க முழுக்க என்னோட பாணியில் இருக்கும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
‘விக்ரம்’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில்கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சிம்பு, உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 1986 ம் ஆண்டு கமல், அம்பிகா, சத்யராஜ் நடித்து வெளிவந்த படம் விக்ரம். ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடத்தப்பட்ட ராக்கெட்டை கண்டுபிடித்து, மீட்பது தான் படத்தின் கதை. மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமான இந்த படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார். தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு அதே டைட்டிலில் கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர் லோகேஷ் கனகராஜ். கமலின் தீவிர ரசிகரான இவர் தற்போது கமல் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இதனை படக்குழுவினரும் உறுதி செய்துள்ளனர்.
இந்தப்படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்யும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பி வருகிறது. இந்நிலையில் லோகேஷ் சமீபத்தி பேட்டி ஒன்றில், ‘மாஸ்டர்’ படம் என்னோடதாகவும் விஜய் சாரோடதாகவும் இருந்தது. ஆனால் ‘விக்ரம்’ படம் என்னோட படமா இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், கமலின் தலையீடு படத்தில் எங்கயும் இல்லை எனவும் தனக்கு முழு சுதந்திரம் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
Наша компания poollife.ru– предлагает перекись водорода для очистки водоемов и бассейнов.
пергидроль 37%