நடிகர் வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி – “இம்சை அரசன் படத்தை ஒத்து கொண்டது என் கெட்ட நேரம்” – cineglit.in

நடிகர் வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி – “இம்சை அரசன் படத்தை ஒத்து கொண்டது என் கெட்ட நேரம்” – cineglit.in

நடிகர் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட ‘ரெட் கார்ட்’ நீக்கப்பட்டு, தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் படங்களில் நடிக்க இருப்பது, மீம் கிரியேட்டர்கள், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ பிரச்னை என பலவற்றை குறித்து நடிகர் வடிவேலு பிபிசி தமிழிடம் பகிர்ந்திருக்கிறார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீது இயக்குநரும், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் கொடுத்திருந்த புகாரின் பேரில் நடிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க ‘ரெட் கார்ட்’ கொடுக்கப்பட்டு இருந்தது.

சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006-ல் வெளியான படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. முதல் முறையாக நடிகர் வடிவேலு முழு நீள கதையில் நாயகனாக, இம்சை அரசன், உக்கிரபுத்திரன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இதன் இரண்டாம் பாகத்திற்குமான எதிர்ப்பார்ப்பும் இருந்தது. இந்த நிலையில்தான் இதன் இரண்டாம் பாகம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், தயாரிப்பு சிக்கல்கள் காரணமாக இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே பிரச்னை நிலவியது. மேலும், இதற்கு காரணமாக நடிகர் வடிவேலு மீது இயக்குநர் ஷங்கர் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த பிரச்னை மீது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நடிகர் வடிவேலு மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையே சமாதானம் செய்யபட்டது. மேலும் நடிகர் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க இனி எந்த தடையும் இல்லை என அவருக்கு கொடுக்கப்பட்ட ‘ரெட் கார்ட்’ நீக்கம் செய்யப்பட்டது.

8 thoughts on “நடிகர் வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி – “இம்சை அரசன் படத்தை ஒத்து கொண்டது என் கெட்ட நேரம்” – cineglit.in

Comments are closed.