Naane Varuvean: பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘நானே வருவேன்’: முதல் நாளில் இம்புட்டு வசூலா.?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நானே வருவேன்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள்

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களும் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகின. இந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். அண்மையில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரசிகர்களின் அந்த குறையை போக்கியது.

இதனையடுத்து தனுஷின் ‘நானே வருவேன்’ படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைந்துள்ள இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘நானே வருவேன்’ படம். அண்ணன், தம்பி என இரண்டு விதமான கெட்டப்களில் நடித்துள்ளார் தனுஷ். ஹீரோவாகவும், மிரட்டலான வில்லனாகவும் கலக்கியுள்ளார் தனுஷ். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் வேறலெவலில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்தப்படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக வெளியாகியுள்ளது. ஆனாலும் இந்தப்படத்திற்கு பெரிய அளவில் படக்குழுவினர் புரோமோஷன் செய்யவில்லை. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் உலகளவில் இப்படம் முதல் நாளில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்தியாவில் மட்டும் ரூ.7.30 கோடி வசூலித்துள்ளதாம். மேலும் அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வருவதால் ‘நானே வருவேன்’ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

The Legend : தி லெஜன்ட் படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா..யார்லம் வாரங்க தெரியுமா…?

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வரும் ஞாயிறு நடைபெறவுள்ள விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி பான் இந்திய நடிகைகள் பங்கேற்க உள்ளனர். தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். ‘தி லெஜன்ட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

‘தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார். இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் ’மொசலோ மொசலு’-வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் பாராட்டுகளை பாடல் கடந்து மாநகரம் முதல் கிராமம் வரை ஹிட் அடித்துள்ளது. பா விஜய் பாடல் வரிகளை இயற்ற, அர்மான் மாலிக் பாடியுள்ளார்.

ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள ‘மொசலோ மொசலு’ பாடலில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோருடன் தோன்றும் லெஜண்ட் சரவணனன், தனது நடன அசைவுகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான பென்னி தயாள் மற்றும் ஜொனிதா காந்தி பாடி கவிஞர் சினேகன் எழுதிய ‘வாடி வாசல்’ சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ஒரு கோடி பார்வைகளை கடந்து வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு பாடல்களின் வெற்றிக்கு மகுடம் சூட்டும் வகையில், தி லெஜண்ட் படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வரும் ஞாயிறு (மே 29) அன்று நடைபெறவுள்ளது.

பிரபல நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன, ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி அகில இந்திய நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.

தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜன்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். தங்கள் தனி திறமையால் முத்திரை பதித்து அனைத்து மொழியிலும் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் ‘தி லெஜண்ட்’ படத்தில் லெஜெண்ட் சரவணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது தி லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’.

ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரும் ரசித்து மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் அனைவரின் மனதிலும் ஒரு மிக பெரிய பாசிட்டிவ் எண்ணத்தை உணரும் வகையில் திரைக்கதையும் வசனமும் எழுதப்பட்டிருக்கிறது.

சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன.

ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் மட்டுமன்றி, இப்படம் தனக்கு ஒரு முக்கியமான படம் என பல நேரங்களில் லெஜண்ட் சரவணன் மற்றும் படக்குழுவினருடன் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இன்றைய முன்னணி நகைச்சுவை நாயகன் யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார்.படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் லெஜண்ட் சரவணனுடன் இணைந்துள்ளனர்.

விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர் வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார், ரூபன் எடிட் செய்கிறார், கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்கிறார், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், சண்டைப்பயிற்சியை அனல் அரசு கையாள்கிறார், ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொள்கிறார்கள்.

வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்கள்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனரஞாயிறு அன்று சென்னையில் நடைபெற உள்ள விழாவில் பான்-இந்தியா நட்சத்திரங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

Vikram: முதல் பாதில ஆண்டவருக்கு கம்மியான சீன் ஏன்.?: லோகேஷ் சொன்ன சீக்ரெட் தகவல்.!

கமல் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விக்ரம்’ படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. Continue reading “Vikram: முதல் பாதில ஆண்டவருக்கு கம்மியான சீன் ஏன்.?: லோகேஷ் சொன்ன சீக்ரெட் தகவல்.!”

‘விக்ரம்’ முழுக்க முழுக்க என்னோட தரமான சம்பவம்: லோகேஷ் சொன்ன மாஸ் தகவல்..!

கமலின் ‘விக்ரம்’ படம் முழுக்க முழுக்க என்னோட பாணியில் இருக்கும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். Continue reading “‘விக்ரம்’ முழுக்க முழுக்க என்னோட தரமான சம்பவம்: லோகேஷ் சொன்ன மாஸ் தகவல்..!”

சீனாவில் ரிலீஸ் ஆகும் கனா திரைப்படம்… சைனீஸில் வாழ்த்திய நடிகர் சத்யராஜ்!

சீனாவில் ரிலீஸ் ஆகும் கனா திரைப்படத்திற்கு சீன மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ். Continue reading “சீனாவில் ரிலீஸ் ஆகும் கனா திரைப்படம்… சைனீஸில் வாழ்த்திய நடிகர் சத்யராஜ்!”

அஜித்தின் ‘வலிமை’ – சினிமா விமர்சனம்

நடிகர்கள்: அஜீத், ஹிமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா, சுந்தர்; இசை: யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான்; ஒளிப்பதிவு: நீரவ் ஷா; இயக்கம்: எச். வினோத். Continue reading “அஜித்தின் ‘வலிமை’ – சினிமா விமர்சனம்”

உடன்பிறப்பே: திரை விமர்சனம்

நடிகர்கள்: சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோதிகா, சிஜா ரோஸ், கலையரசன், ஆடுகளம் நரேன், சூரி, நிவேதிதா சதீஷ், வேல ராமமூர்த்தி, நமோ நாராயணா; இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: வேல்ராஜ்; இயக்கம்: இரா சரவணன். Continue reading “உடன்பிறப்பே: திரை விமர்சனம்”

ஆர்யனுக்கு அக்டோபர் 7வரை காவல் – பாலிவுட்டில் என்ன நடக்கிறது?

போதைப்பொருள் விவகாரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை நடத்தி வரும் விசாரணையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை வரும் 7ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க புலனாய்வாளர்களுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. Continue reading “ஆர்யனுக்கு அக்டோபர் 7வரை காவல் – பாலிவுட்டில் என்ன நடக்கிறது?”

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களில் மறக்க முடியாதது அற்புதம் எது? மனம் திறந்த பாடகி சித்ரா – cineglit.in

தான் எவ்வளவு பெரிய பாடகராக இருந்தாலும் அணியில் இருந்த இசைக்கலைஞர்களின் நலனில் அக்கறை உள்ளவராக இருந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று கூறி ஒரு நிகழ்வை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார் பின்னணிப் பாடகி சித்ரா. Continue reading “எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களில் மறக்க முடியாதது அற்புதம் எது? மனம் திறந்த பாடகி சித்ரா – cineglit.in”

அனபெல் சேதுபதி – விமர்சனம்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு, ராஜந்திரபிரசாத்; இசை: கிருஷ்ண கிஷோர்; ஒளிப்பதிவு: ஜார்ஜ் கௌதம்; இயக்கம்: தீபக் சுந்தர்ராஜன். Continue reading “அனபெல் சேதுபதி – விமர்சனம்”