சீனாவில் ரிலீஸ் ஆகும் கனா திரைப்படத்திற்கு சீன மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ்.
கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் கனா. இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமானார் அருண்ராஜா காமராஜ். இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் “கனா” திரைப்படம் சீனாவில் இன்று 10,700 திரையரங்குகளில் வெளியாகிறது.
“பாகுபலி” ” கனா” என்று தொடர்ந்து இரண்டு தென்னிந்திய திரைப் படங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது. இந்த இரு படங்களிலும் சத்யராஜ் நடித்துள்ளார். இந்த பெருமையைப் பெற்ற ஒரே தென்னிந்திய நடிகர் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சத்யராஜ் படக் குழுவினர்க்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ச்சு ஹர் என சைனிஷ் மொழியில் வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ்.