Dhanush: ஒரே நேரத்தில் ரஜினி, தனுஷுடன் இணையும் பிரபலம்: வெறித்தனமான அப்டேட்.!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களும் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகின. இந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். அண்மையில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரசிகர்களின் அந்த குறையை போக்கியது.

தனுஷ், நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து ‘நானே வருவேன்’ படத்தில் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைந்துள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். 1930-40 களில் நடந்த சம்பவங்களாக பீரியட் புலிமான இந்தப்படம் உருவாகவுள்ளது.

இதன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் சம்பந்தமான படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிவராஜ்குமார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விற்பனை ஆகி விட்டதாக கூறப்படுகிறது. கெளபாய் பாணியில் ‘கேப்டன் மில்லர்’ படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.