Zee tamil: கடைசி நிமிடத்தில் புஷ்பாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.பஞ்சாயத்தில் ஹெல்மெட் நபர் ஹெல்மெட்டை கழட்ட அது சங்கிலி என தெரியவர அனைவரும் ஷாக்காகின்றனர். இரங்கநாயகி சங்கிலியை மிரட்டி உண்மையை கேட்க அவன் பத்து லட்சம் பணத்தை திருடியது நான்தான் என்று ஒத்துக்கொள்கிறான்.
அப்போது வெற்றி கெத்தாக வந்து நின்று பார்க்க இரங்கநாயகி புஷ்பாவிடம் இனிமேல் வீட்டையும் மெஸ்ஸையும் கேட்டு மீனாட்சியை தொந்தரவு பண்ண கூடாது, அதோட இப்படி ஒரு தப்பு நடக்க காரணமான புஷ்பா மீனாட்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும் என்று தீர்ப்பு சொல்கிறாள்.
தீர்ப்பை புஷ்பா மறுக்க ஊரே புஷ்பாவை எதிர்க்க வேறுவழியில்லாமல் புஷ்பா மீனாட்சி காலில் விழுந்துவிட்டு ஓடுகிறாள். பஞ்சாயத்து கூட்டம் கலைய அங்கு சக்தி வந்து அம்மா மீது கோவபட்டு செல்ல மீனாட்சி வருத்தப்பட்டு நிற்கிறாள்.
இரங்கநாயகி வீட்டில் சரண்யா காத்திருக்க வெற்றி நண்பர்களுடன் வந்து பஞ்சாயத்தில் நடந்த விசயங்களை சொல்ல அவள் எப்படி உண்மையை ஒத்துகிட்டா என கேட்க வெற்றி ஃப்ளாஷ் பேக்கில் நடந்த விஷயங்களை சொல்கிறான்.

இந்த பக்கம் புஷ்பா தன் வீட்டில் மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்ற அனைவரும் தடுக்க என் மானம் போச்சே என சங்கிலியை அடித்து அழுகிறாள். பஞ்சாயத்தில் அசிங்கப்பட்ட புஷ்பா மீனாட்சியை பழிவாங்க அடுத்து என்ன செய்யப் போகிறாள்? மீனாட்சி சக்தியை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை அறிய தவறாமல் மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாருங்கள்.