PS 1: பாக்ஸ் ஆபிஸில் சூறாவளி வசூல்: 500 கோடியை நெருங்கும் ‘பொன்னியின் செல்வன்’.!

PS 1: பாக்ஸ் ஆபிஸில் சூறாவளி வசூல்: 500 கோடியை நெருங்கும் ‘பொன்னியின் செல்வன்’.!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ள‘பொன்னியின் செல்வன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.

திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையிலும் நடந்து வருகிறது ‘பொன்னியின் செல்வன்’ படம். பான் இந்தியா முறையில் உருவான இப்படம் முதல் நாள் உலகம் முழுக்க ரூ.78.29 கோடியையும், இரண்டாவது நாள் ரூ.60.16 கோடியையும், மூன்றாவது நாள் ரூ.64.42 கோடியையும் வசூலித்தது. ரசிகர்கள் மத்தியில் குறையாத வரவேற்பு இருந் காரணத்தால் வசூலில் சக்கை போடு போட்டு வந்தது இந்தப்படம்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இதுவரை உலக அளவில் 450 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 200 வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் 500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தீபாவளிக்கு வெளியாகும் புது படங்களின் வருகையால் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூல் குறையும் எனவும் வெளியாகியுள்ளன.