PS 1: பாக்ஸ் ஆபிஸில் சூறாவளி வசூல்: 500 கோடியை நெருங்கும் ‘பொன்னியின் செல்வன்’.!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ள‘பொன்னியின் செல்வன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.

திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையிலும் நடந்து வருகிறது ‘பொன்னியின் செல்வன்’ படம். பான் இந்தியா முறையில் உருவான இப்படம் முதல் நாள் உலகம் முழுக்க ரூ.78.29 கோடியையும், இரண்டாவது நாள் ரூ.60.16 கோடியையும், மூன்றாவது நாள் ரூ.64.42 கோடியையும் வசூலித்தது. ரசிகர்கள் மத்தியில் குறையாத வரவேற்பு இருந் காரணத்தால் வசூலில் சக்கை போடு போட்டு வந்தது இந்தப்படம்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இதுவரை உலக அளவில் 450 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 200 வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் 500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தீபாவளிக்கு வெளியாகும் புது படங்களின் வருகையால் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூல் குறையும் எனவும் வெளியாகியுள்ளன.

Zee tamil: கடைசி நிமிடத்தில் புஷ்பாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.பஞ்சாயத்தில் ஹெல்மெட் நபர் ஹெல்மெட்டை கழட்ட அது சங்கிலி என தெரியவர அனைவரும் ஷாக்காகின்றனர். இரங்கநாயகி சங்கிலியை மிரட்டி உண்மையை கேட்க அவன் பத்து லட்சம் பணத்தை திருடியது நான்தான் என்று ஒத்துக்கொள்கிறான்.
அப்போது வெற்றி கெத்தாக வந்து நின்று பார்க்க இரங்கநாயகி புஷ்பாவிடம் இனிமேல் வீட்டையும் மெஸ்ஸையும் கேட்டு மீனாட்சியை தொந்தரவு பண்ண கூடாது, அதோட இப்படி ஒரு தப்பு நடக்க காரணமான புஷ்பா மீனாட்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும் என்று தீர்ப்பு சொல்கிறாள்.
தீர்ப்பை புஷ்பா மறுக்க ஊரே புஷ்பாவை எதிர்க்க வேறுவழியில்லாமல் புஷ்பா மீனாட்சி காலில் விழுந்துவிட்டு ஓடுகிறாள். பஞ்சாயத்து கூட்டம் கலைய அங்கு சக்தி வந்து அம்மா மீது கோவபட்டு செல்ல மீனாட்சி வருத்தப்பட்டு நிற்கிறாள்.
இரங்கநாயகி வீட்டில் சரண்யா காத்திருக்க வெற்றி நண்பர்களுடன் வந்து பஞ்சாயத்தில் நடந்த விசயங்களை சொல்ல அவள் எப்படி உண்மையை ஒத்துகிட்டா என கேட்க வெற்றி ஃப்ளாஷ் பேக்கில் நடந்த விஷயங்களை சொல்கிறான்.

இந்த பக்கம் புஷ்பா தன் வீட்டில் மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்ற அனைவரும் தடுக்க என் மானம் போச்சே என சங்கிலியை அடித்து அழுகிறாள். பஞ்சாயத்தில் அசிங்கப்பட்ட புஷ்பா மீனாட்சியை பழிவாங்க அடுத்து என்ன செய்யப் போகிறாள்? மீனாட்சி சக்தியை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை அறிய தவறாமல் மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாருங்கள்.

சீனாவில் ரிலீஸ் ஆகும் கனா திரைப்படம்… சைனீஸில் வாழ்த்திய நடிகர் சத்யராஜ்!

சீனாவில் ரிலீஸ் ஆகும் கனா திரைப்படத்திற்கு சீன மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ். Continue reading “சீனாவில் ரிலீஸ் ஆகும் கனா திரைப்படம்… சைனீஸில் வாழ்த்திய நடிகர் சத்யராஜ்!”

டிக்கிலோனா’: சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக சர்ச்சை – என்ன நடந்தது?

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படம் ‘டிக்கிலோனா’. Continue reading “டிக்கிலோனா’: சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக சர்ச்சை – என்ன நடந்தது?”

“நயன்தாரா கொடுத்த தைரியம்”- ‘கூழாங்கல்’ பட இயக்குநர் வினோத்ராஜ் பேட்டி – cineglit.in

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கூழாங்கல்’. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் இந்த படம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவின் `டைகர்’ விருதை வென்றுள்ளது. Continue reading ““நயன்தாரா கொடுத்த தைரியம்”- ‘கூழாங்கல்’ பட இயக்குநர் வினோத்ராஜ் பேட்டி – cineglit.in”

திரை பாலியல் காட்சிகளை எளிதாக்கும் இந்தியாவின் `இன்டிமஸி கோஆர்டினேட்டர்’ – இப்படி ஒரு பதவியா?

1992ஆம் ஆண்டில் வெளியான “பேசிக் இன்ஸ்டிங்க்ட்” திரைப்படத்தின் ஒரு சர்ச்சைக்குரிய காட்சியில், தந்திரமாக தனது உள்ளாடை கழற்ற வைக்கப்பட்டதாக ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் சமீபத்தில் கூறியுள்ளார். காவல் துறை விசாரணை ஒன்றின் போது தனது கால்கள் விரிக்க வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். Continue reading “திரை பாலியல் காட்சிகளை எளிதாக்கும் இந்தியாவின் `இன்டிமஸி கோஆர்டினேட்டர்’ – இப்படி ஒரு பதவியா?”

சுஷாந்த்சிங் ராஜ்புத் வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் அனைத்து ஆவணங்களையும் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) வசம் மும்பை காவல்துறை ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Continue reading “சுஷாந்த்சிங் ராஜ்புத் வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு”