அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கூழாங்கல்’. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் இந்த படம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவின் `டைகர்’ விருதை வென்றுள்ளது.
இந்த விருதை வெல்லும் முதல் தமிழ்ப்படம் இது. இதையடுத்து, தற்போது யுக்ரேன் தலைநர் கீஃபில் மே 29 முதல் ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெறும் ‘Molodist Internatinational Film Festival’ நிகழ்விலும் இந்த படம் திரையிட தேர்வாகியுள்ளது. தமிழில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் இது. இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ‘ரெளடி பிக்சர்ஸ்’ இந்த படத்தை தயாரிக்க படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா. இந்த படம் குறித்து இயக்குநர் வினோத்ராஜிடம் பிபிசி தமிழுக்காக ஆனந்தப்பிரியா கலந்துரையாடினார். அதில் இருந்து.
“மதுரைதான் என்னுடைய சொந்த ஊர். அங்கே இருந்து சினிமா கனவோடு 15 வருடங்களுக்கு முன்பு சென்னை கிளம்பி வந்து உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அலைந்தேன். சில காலம் தியேட்டர் நாடகக்குழுவில் உதவி இயக்குநராகவும் இருந்தேன். ‘கூழாங்கல்’ படத்தின் கதை நம் தினசரி வாழ்வில் அன்றாடம் கடக்கக்கூடியதுதான். மிகவும் எளிமையான கதைதான். அப்பாவும் மகனுக்குமான கதை. ஒரு நாள் சண்டையில் தன் மனைவியை கணவன் அடித்து துரத்திவிடுவான். ஆனால், அவள் இல்லாமல் அவனால் இரண்டு நாட்கள் கூட சமாளிக்க முடியாது. மனைவியை அழைத்து வர மகனோடு மாமியார் வீட்டிற்கு கணவன் செல்வான். அங்கு அவர்களோடு சண்டை போடுவான். அப்போது அந்த சின்ன பையன், அவன் வயதுக்கு தகுந்தாற்போல ஒரு முடிவெடுத்து அவன் அப்பாவிடம் என்ன செய்கிறான், கடைசியில் என்ன ஆனது என்பதுதான் கதை.”
“இப்போது ‘கூழாங்கல்’ படம் சர்வதே அளவில் பல விருதுகளை குவித்து வருகிறது. இதுவரை நான் பெரிதாக வெளிநாடுகள் சென்றதில்லை. என்னுடைய படம் அழைத்துப் போகும் என காத்திருந்தேன். அது இப்போது நடந்து கொண்டிருக்கும் போது, பொது முடக்கத்தால் அது நடக்காமல் இருப்பதில் கொஞ்சம் வருத்தம்”.
https://bit.ly/3iPCxld HELP ME
HELP ME