Breaking News


Warning: sprintf(): Too few arguments in /var/www/cineglit.in/data/www/cineglit.in/wp-content/themes/newsreaders/assets/lib/breadcrumbs/breadcrumbs.php on line 252

வாழ்: சினிமா விமர்சனம்

நடிகர்கள்: பிரதீப், டிஜே பானு பார்வதமூர்த்தி, ஆரவ் எஸ். கோகுல்நாத், திவா, நித்யா; ஒளிப்பதிவு: ஷெல்லி கலிஸ்ட்; இசை: பிரதீப் குமார்; இயக்கம்: அருண் பிரபு புருஷோத்தமன்.

வழக்கமான தமிழ் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு, அருவி என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த படம்தான் இந்த ‘வாழ்’.

ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைசெய்யும் சாதாரண இளைஞனான பிரகாஷின் (பிரதீப்) வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு இளம்பெண்ணாலும் (டிஜே பானு) அதனால் அவன் மேற்கொள்ளும் பயணங்களாலும் அவனது வாழ்க்கையே திசைமாறிப் போகிறது.

பயணத்தின் முடிவில் நாயகன் என்னவாக ஆகிறான் என்பதே கதை. ‘நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நாம் வாழ்வை மாற்றுகிறார்கள்’ என்ற ஒன் லைன்தான் படம்.

படத்தின் துவக்கம் சற்று தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாலும், சிறிது நேரத்தில் சூடுபிடிக்கிறது. யாத்ராம்மாவைக் கூட்டிக்கொண்டு கதாநாயகன் மேற்கொள்ளும் பயணம் ஒரு கட்டம்வரை சுவாரஸ்யமாகவே செல்கிறது. நன்னிலத்தில் ஒரு பெரியவரைச் சந்தித்த பின் நடக்கும் சம்பவங்கள் இதன் உச்சகட்டமாக அமைகின்றன. ஆனால், அதற்குப் பிறகு படம் வீழ்ச்சியைச் சந்திக்கிறது.