Breaking News


Warning: sprintf(): Too few arguments in /var/www/cineglit.in/data/www/cineglit.in/wp-content/themes/newsreaders/assets/lib/breadcrumbs/breadcrumbs.php on line 252

தமிழ் நாட்டுக்கு மதுரையை இரண்டாவது தலைநகரமாக்குவது சாத்தியமா?

தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ஆளும் அ.தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஆனால், இந்தத் திட்டம் சாத்தியமான ஒன்றா?

சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை ஆக்க வேண்டும் என்று ஆளும் அ.தி.மு.கவின் கிழக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக ஆக்கினால், தென் மாவட்டங்கள் வளம்பெறும் என்று தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜுவும் இந்த யோசனையை வலியுறுத்தினார். இதையடுத்து மதுரையைச் சேர்ந்த வணிகர் சங்கங்களும் இதனை ஆதரித்தன.

அ.தி.மு.கவின் கிழக்கு மாவட்டத்தால் வலியுறுத்தப்பட்டு, வருவாய்த் துறை அமைச்சரால் முன்வைக்கப்படும் இரண்டாம் தலைநகரம் என்பதற்கு என்ன பொருள்? சென்னையில் இருப்பது போல ஒரு தலைமைச் செயலகம், சட்டப்பேரவை ஆகியவற்றை மதுரையிலும் உருவாக்க வேண்டுமா?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் பிபிசியிடம் விரிவாகப் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் ஒரு ஒன்றை உருவாக்க விரும்புவதாகச் சொன்னார்.

“அதாவது ஒரு நிர்வாக நகரத்தை உருவாக்க வேண்டுமெனச் சொல்கிறேன். தற்போது எல்லா அனுமதிகளுக்கும் சென்னைக்குச் சென்றுகொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவே, சென்னையைச் சுற்றியே தொழிற்சாலைகள் உருவாகிவருகின்றன. பிற மாவட்டங்களில் தொழிற்சாலைகளைத் துவங்க எவ்வளவோ சலுகைகளை அளித்தும் எல்லோருமே சென்னைக்கு அருகிலேயே தொழிற்சாலைகளைத் துவங்க விரும்புகின்றனர். கன்னியாகுமரியில் வசிக்கும் ஒருவர்கூட அனுமதிகளுக்காக சென்னைக்கு வர வேண்டியிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் பிற பகுதிகள் சென்னையைவிட 10 ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றன. தமிழ்நாடு அரசில் உள்ள 56 துறைகளுக்குமான முக்கிய முடிவுகள் சென்னையிலேயே எடுக்கப்படுகின்றன.

நாங்கள் முன்வைப்பது என்னவென்றால் மதுரையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் தொடர்பான முடிவுகளை, அனுமதிகளை பெறும் வகையில் ஒரு நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கான அளவீடுகள் மதிப்பீடுகளுக்கு சென்னைக்கு வர வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படத்த வேண்டும்” என தாம் முன்வைக்கும் இரண்டாவது தலைநகரம் திட்டத்தை விவரித்தார் ஆர்.பி. உதயகுமார். சென்னைக்கு மாற்றாக மற்றொரு தலைநகரத்தை முன்வைத்து ஒரு விவாதம் 80களிலேயே துவங்கிவிட்டது. 80களின் துவக்கத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது, தலைநகரத்தை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றும் திட்டத்தை பரிந்துரைத்தார். தமிழ்நாட்டில் எல்லாப் பகுதிகளில் இருந்தும் திருச்சியை வந்தடைந்துவிடலாம் என்ற எண்ணத்திலும் சென்னையில் அதிகரித்துவரும் நெருக்கடியை மனதில் வைத்தும் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை.

அதற்குப் பிறகு கோயம்புத்தூர், திருச்சி, மதுரையில் சர்வதேச விமான நிலையங்கள், மதுரையில் உயர் நீதிமன்றத்தின் அமர்வு என வசதிகள் பரவலாக்கப்பட்ட பிறகு இந்தக் கோரிக்கை பெரிதாக எழவில்லை. இந்த மூன்று பெரிய நகரங்களிலும் உள்ள வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் மட்டும் எழுந்தவண்ணம் இருந்தன.

அ.தி.மு.க. அமைச்சர்கள் வைத்த கோரிக்கையை அடுத்து, மதுரையில் உள்ள வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பான சேம்பர் ஆஃப் காமர்ஸ் இந்தத் திட்டத்தை வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறது.